×

தாந்தோணிமலை ஒன்றியத்தில் சொட்டு நீர்ப்பாசன திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

 

கரூர், ஆக. 25: சொட்டு நீர்ப்பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் என தாந்தோணிமலை ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குநர் கவிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் (பி.எம்.கே.எஸ்.ஒய்), தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி, தோட்டக்கலை துறை சார்பில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து ஏழு ஆண்டுகளான விவசாயிகள், புதிய சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் துணை நீர் மேலாண்மை திட்டத்தின் நுண்ணுயிர் பாசன முறையை அமைக்க பெரும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. டீசல் பம்ப்செட் அல்லது மோட்டார் பம்ப்செட் அமைக்க அதன் நிலையில் 50% அல்லது ரூ.15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். வயலுக்கு அருகில் நீர்ப்பாசன குழாய் அமைக்க, அதன் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமலும் மானியம் வழங்கப்படுகிறது. துணை நீர் மேலாண்மை திட்டத்தில் தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, சொட்டுநீர்ப் பாசனத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் அலுவலகம், தான்தோன்றி மலை என்ற முகவரியில் நேரில் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாந்தோணிமலை ஒன்றியத்தில் சொட்டு நீர்ப்பாசன திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Thanthonimalai Union ,Karur ,Thanthonimalai ,Union ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...