×

தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பள்ளம்

 

தா.பழூர், ஆக.25: தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் சாலையின் குறுக்கே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் பொதுமக்கள் விநியோகத்திற்கு செல்கிறது. இந்நிலையில் சாலையின் குறுக்கே உள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சில தினங்களாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வந்த நிலையில் தற்போது அந்த இடத்தில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி அரியலூரில் இருந்து கும்பகோணம் மற்றும் பல பகுதிகளுக்கு செல்லும் கனரா வாகனங்களும் அரசு பேருந்துகளும் இயங்கி வரும் நிலையில் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கொள்ளிட கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உழைப்பால் குடிநீரும் வீணாகி வருகிறது.

இந்த குழாய் உடைப்பில் வீணாகிய குடிநீரானது வாகனங்கள் செல்லும்போது, மண்ணரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளமாக உருவெடுத்துள்ளது. இதனால் அந்த பகுதி சாலையே சேரும் சகதியாக காட்சியளிக்கிறது. மேலும் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் பள்ளத்தில் வாகனத்தை செலுத்தி நிலை தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டுகளுக்கும் அச்சுறுத்தும் வகையில் உள்ள இந்த பள்ளத்தை சரி செய்தும், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பள்ளம் appeared first on Dinakaran.

Tags : Suttamalli division ,T. Bhaur. Dha.Pazhur ,Dha.Phaur Sudtamalli ,
× RELATED பழநி நகர் பகுதியில் சாலையோரம்...