×

வாரணவாசி அருங்காட்சியகத்தில் புதை உயிரி படிவங்கள் கண்காட்சி

 

அரியலூர், ஆக.25: அரியலூர் அடுத்த வாரணவாசியிலுள்ள புதை உயிரிப் படிவ அருங்காட்சியகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதை உயிரி படிவங்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை காண சேலம், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் வருகை புரிந்தனர். அவர்களிடம், புதை உயிரிப் படிவங்கள் குறித்து அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவகுமார் விளக்கினார்.

ஒருவாரம் நடைபெறும் இந்த கண்காட்சியில், சுண்ணாம்புக்கல் ஜிப்சம், என்ற படிக வகை பாறை, பாசில் என்ற தொல்லுயிரினங்கள், மேலும் இம்மாவட்டத்தில் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அதனுடைய முட்டைகள், கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள், எலும்புகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

The post வாரணவாசி அருங்காட்சியகத்தில் புதை உயிரி படிவங்கள் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Fossils Exhibition ,Waranavasi Museum ,Ariyalur ,Chief Minister ,Karunanidhi Centenary ,
× RELATED அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு...