×

சிறுமியை கடத்திய லாரி டிரைவர் போக்சோவில் கைது

 

ஜெயங்கொண்டம், ஆக.25: பெரம்பலூர் மாவட்டம் பீல்வாடி காலனி தெருவை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மகன் ஆனந்தராஜ் (27) லாரி டிரைவர். இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 சிறுமியை 2 ஆண்டாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அந்த சிறுமி மாயமானார்.

இதனால் அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் பீல்வாடி ஆனந்தராஜ் சிறுமியை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் தலைமையிலான போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு ஆனந்தராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சிறுமியை கடத்திய லாரி டிரைவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Bokso ,Jayangondam ,Ammasi ,Bhilwadi Colony Street ,Perambalur District ,Anandaraj ,Pocso ,Dinakaran ,
× RELATED அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை