திருமயம்.ஆக.25: திருமயம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி சுற்றுச்சுவரை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் சிவகாமி அம்பாள் உயர்நிலைப்பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை எழுந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி நுழைவாயிலுடன் கூடிய சுற்றுச்சுவர் கடந்த மாதம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் திறப்பு விழா நேற்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி சுற்றுச்சுவரை திறந்து வைத்து மாணவர்களிடையே கலெக்டர் மெர்சி ரம்யா உரையாற்றினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post திருமயம் அருகே ரூ.50 லட்சத்தில் அரசு பள்ளியில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் appeared first on Dinakaran.