×

காலி பணியிடங்களை நிரப்ப கோரி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா

 

புதுக்கோட்டை, ஆக.25: தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் (ஏஐபிஇஏ), தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.என். ராஜேந்திரன் தலைமை வகித்தார், மாவட்டச் செயலர் அருணாசலம், பொருளாளர் தனபால் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கூட்டுறவு வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே நிலுவையில் உள்ள கோரிக்கைகளை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

The post காலி பணியிடங்களை நிரப்ப கோரி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Tamil Nadu Bank Employees Association ,AIPEA ,Tamil Nadu Cooperative Bank Employees Association ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளிகளில்...