×

மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

 

கோவை, ஆக. 25: கோவை மாவட்டம் குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் ஆகிய பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதில், உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (டிசிஏ) முடித்திருக்க வேண்டும்.

மேலும், தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும். இப்பணிக்கு ரூ.11 ஆயிரம் 916 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பங்களை coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோவை-641018 என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 11ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : District Child Welfare Board ,Coimbatore ,Coimbatore Child Welfare Board ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒன்றிய...