×

₹1.67 கோடி மதிப்பீட்டில் 26 புதிய திட்டப்பணிகள்

ராசிபுரம், ஆக.25: ராசிபுரம் ஒன்றியத்தில் ₹1.67 கோடி மதிப்பிலான 26 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் நேற்று துவக்கி வைத்தார். ராசிபுரம் ஒன்றியம், பொன்குறிச்சி ஊராட்சியில் ஐயப்பன் நகர் 2 மற்றும் 3வது குறுக்கு தெருக்களில், தலா ₹9.80 லட்சத்தில் கான்கிரீட் சாலை, அருந்ததியர் காலனி வடக்கு தெருவில் ₹4 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், கோப்பம்பட்டி காலனி அருந்ததியர் தெருவில் ₹10.52 லட்சத்தில் விவசாய விளைப்பொருள் சேமிப்பு கூடம் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. மேலும், பொ.ஆயிபாளையம் ஊராட்சியில் ஏழூர் ரோடு முதல் பின்புற தெரு வரை ₹7.73 லட்சத்தில் கான்கிரீட் சாலை, ஏழூர் ரோடு முதல் பிள்ளாநல்லூர் பேரூராட்சி எல்லை 2வது தெரு வரை ₹5.50 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது.

மேலும், புதூர் மலையாம்பட்டி அம்மன் நகர் 2வது வீதியில் ₹4.95 லட்சத்தில் கான்கிரீட் சாலை, அம்மன் நகர் முதல் குறுக்கு வீதியில் ₹2.03 லட்சத்தில் கான்கிரீட் சாலை, ப.மு.பாளையம் கிராமத்தில் ₹944 லட்சத்தில் விவசாய இடுபொருள் வைப்பு கூடம் அமைக்கப்படுகிறது. பாலப்பாளையம் 9 வது தெருவில் ₹5 லட்சத்தில் கான்கிரீட் சாலை, கூனவேலம்பட்டி சித்தர்கோவில் சாலை அருகில் ₹4.82 லட்சத்தில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி என மொத்தம் ₹1.67 கோடி மதிப்பீட்டில் 26 புதிய திட்டப்பணிகளை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், பிடிஓ.,க்கள் தனம், மேகலா, பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி, பாலச்சந்திரன், ஒன்றியக்குழு துணை தலைவர் சந்திரா சிவகுமார், பாலு, கண்ணன், முகேஷ், முத்துசெல்வன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

The post ₹1.67 கோடி மதிப்பீட்டில் 26 புதிய திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Minister ,Mathivendan ,Rasipuram Union ,Dinakaran ,
× RELATED காதலியின் கணவனை கொன்ற அதிமுக பஞ்.தலைவர்