×

காரிமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு குண்டுமல்லி ₹1000க்கு விற்பனை

காரிமங்கலம், ஆக.25: காரிமங்கலத்தில், பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ ₹1000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில விவசாயம் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. மேலும், மலர் சாகுபடி பரப்பும் அதிகரித்து வருகிறது. காரிமங்கலம், பெரியாம்பட்டி, கோவிலூர், கெரகோடஅள்ளி, அடிலம், திண்டல், சிக்க திம்மன அள்ளி, பேகார அள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம், அரளி, கோழிக்கொண்டை, சாமந்தி, பன்னீர் ரோஸ் உட்பட பல்வேறு ரகங்கள் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பூக்கள் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. குண்டுமல்லி, கனகாம்பரம் கிலோ ₹1000 வரையிலும், சன்னமல்லி ₹500, அரளி ₹250, சாமந்தி ₹150, பன்னீர் ரோஸ் ₹160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் முகூர்த்தம், வரலட்சுமி நோன்பை தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட விழாக்கள் வரிசையாக வருவதால் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post காரிமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு குண்டுமல்லி ₹1000க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Kundamalli ,Gundamalli ,Dharmapuri… ,Dinakaran ,
× RELATED ₹12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை