×

செஸ் உலக கோப்பையில் வெள்ளி வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: 2023 செஸ் உலகக்கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியமைக்காக ‘சென்னையின் பெருமிதம்’ பிரக்ஞானந்தாவுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். இறுதி முடிவு என்னவாக இருந்தாலும், உங்களது சாதனையோடு 140 கோடி இந்தியர்களின் இதயங்களும் இணைந்து துடிக்கிறது. நம் நாடே உங்களை நினைத்து பெருமை கொள்கிறது. நீங்கள் வென்றுள்ள இந்த வெள்ளிப் பதக்கமும், கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்றதும் இன்னும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.

The post செஸ் உலக கோப்பையில் வெள்ளி வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Pragnananda ,Chess World Cup ,Chennai ,M.K. Stalin ,2023 Chess World Cup ,
× RELATED தொகுதி மக்களிடம் நல்ல பெயர்...