×

சந்திரயான்-3 நிலவில் கால் பதித்த தருணத்தில்…பிறந்த குழந்தைகளுக்கு சந்திரயான் என பெயர் சூட்டி கொண்டாடிய பெற்றோர்கள்

கேந்திரபாரா: ஒடிசாவில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு சந்திரயான் என பெற்றோர்கள் பெயர் சூட்டி இந்திய விஞ்ஞானிகளின் சாதனையை கொண்டாடி உள்ளனர். இந்திய விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் நிலவின் தென்துருவத்தில் திட்டமிட்டபடி சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி மகத்தான சாதனையை படைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியை பலரும் பல்வேறு விதமாக கொண்டாடி மகிழ்ச்சியை வௌிப்படுத்தினர். இந்நிலையில் சந்திரயான்-3 கால்பதித்த நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சந்திரயான் என பெயர் வைத்து பெற்றோர்கள் மகிழ்ச்சியை வௌிப்படுத்தி உள்ளனர்.

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்ட மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை சந்திராயன் 3 நிலவில் தரைஇறங்கிய நேரத்தில் ஒரு ஆண் குழந்தையும், 3 பெண் குழந்தைகளும் பிறந்தன. சந்திரயான்-3 நிலவில் கால் பதித்த நேரத்தில் தங்களுக்கு குழந்தை பிறந்ததை நினைத்து பெற்றோர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை வௌிப்படுத்தும் விதமாக தங்கள் குழந்தைகளுக்கு சந்திரயான் என்று பெயர் சூட்டி உள்ளனர். இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் கூறும்போது, “இந்தியா சாதனை படைத்த நேரத்தில் எங்களுக்கு குழந்தை பிறந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.

கேந்திரபாரா மாவட்ட மருத்துவமனை கூடுதல் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் பி.கே.பிரகராஜ் கூறியதாவது, “நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் தங்களுக்கு குழந்தை பிறந்ததை 4 பேரும் பாக்கியமாக கருதுகின்றனர். குழந்தைகளுக்கு சந்திரயான் என பெயர் வைத்து இந்தியாவின் சாதனையை கொண்டாட அவர்கள் விரும்புகின்றனர்” என்று தெரிவித்தார்.

The post சந்திரயான்-3 நிலவில் கால் பதித்த தருணத்தில்…பிறந்த குழந்தைகளுக்கு சந்திரயான் என பெயர் சூட்டி கொண்டாடிய பெற்றோர்கள் appeared first on Dinakaran.

Tags : Chandrayaan ,Kendrapara ,Odisha ,
× RELATED ஓட்டு மெஷினை சேதப்படுத்திய விவகாரம்: ஒடிசா மாநில பாஜக எம்எல்ஏ கைது