×

முயல் வேட்டை 2 வாலிபர்கள் மின் கண்ணியில் சிக்கி பரிதாப பலி

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே, இடையபட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி (21), அலப்பலச்சேரியைச் சேர்ந்த அனுமந்த ராஜா (17), மனோஜ் (29) ஆகியோர் கண்மாய் பகுதிக்கு அருகில் முயல் வேட்டைக்கு மின் இணைப்பு இல்லாத கண்ணி அமைக்க நேற்று காலை சென்றுள்ளனர். அப்போது, அங்கு மற்றொரு தரப்பினர் மின் இணைப்புடன் அமைத்திருந்த கண்ணியை பார்க்காமல் அதில் சிக்கியுள்ளனர். இதில், மின்சாரம் தாக்கி கருப்பசாமி, அனுமந்த ராஜா ஆகியோர் உயிரிழந்தனர். மனோஜ் படுகாயமடைந்தார். இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post முயல் வேட்டை 2 வாலிபர்கள் மின் கண்ணியில் சிக்கி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Karuppasamy ,Adiyapatti ,Beraiyur ,Anumanta Raja ,Alapalacherry ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...