×

அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: திருச்சியில் கடந்த 2009ல் கட்டப்பட்ட ‘கலைஞர் அறிவாலயம்’ கட்டிடத்திற்கான நிலம் தன்னிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும், பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு மிகக் குறைந்த விலையே தரப்பட்டதாகவும் சீனிவாசன் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, அமைச்சர் கே.என்.நேரு மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் மீது திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.என்.நேரு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு சமரசமாக சென்று விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார். புகார்தாரர் தரப்பிலும் சமரச மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,KN Nehru ,Chennai ,Kalaignar Vithalayam ,Trichy ,
× RELATED அரசு போக்குவரத்து கழகம் சார்பில்...