×

மின்வாரிய இயக்குநர்கள் இடமாற்றம்: அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் இயக்குநர்கள், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு: மின் தொடரமைப்பு கழகத்தின் நிதி இயக்குநர், பரிமாற்ற திட்டப்பணிகள் இயக்குநர் மற்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பகிர்மான இயக்குநர் ஆகிய காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மணிவண்ணன் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பகிர்மான இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உற்பத்தி திட்டங்கள் இயக்குநர் ராமசந்திரன் மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இயக்குநர் சுந்தரவதனம் மின் தொடரமைப்பு கழகத்தின் நிதி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திட்டங்கள்-II பிரிவு தலைமை பொறியாளர் உமா தேவி உற்பத்தி திட்டங்கள் இயக்குநராகவும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வணிக பிரிவு தலைமை பொறியாளர் ஷியாமளா மின் தொடரமைப்பு கழகத்தின் பரிமாற்ற திட்டப் பணிகள் இயக்குநராகவும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வருவாய் தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் மலர்விழி நிதி இயக்குராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post மின்வாரிய இயக்குநர்கள் இடமாற்றம்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Power Board ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே துணை மின்நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு