×

தமிழக ஆளுநர் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்படவில்லை: கவர்னர் மாளிகை மறுப்பு

சென்னை: தமிழக ஆளுநர் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்படவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆளுநர் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக வெளியிடப்பட்ட தகவல்கள் தவறானவை.
* ஆளுநர் பிப்ரவரி 21 – 23, 2022 அன்று ஊட்டியில் குடும்ப நிகழ்ச்சியை நடத்தினார்.
* ஆளுநரின் விருந்தினர்கள் அனைவரும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ்பவனில் யாரும் தங்கவில்லை.
* விருந்தினர்கள் மட்டுமின்றி ஆளுநரின் குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கு அரசு வாகனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம், தேநீர் மற்றும் காபி உள்பட உணவு வழங்குதல், விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், சேவை பணியாளர்கள் உள்பட நிகழ்வுக்கான முழு செலவையும் ஆளுநரே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார்.
* ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கு கூட ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது வழங்கப்படுகிறது. அதை ராஜ்பவன் செலுத்த உரிமையிருந்தாலும் அந்த செலவினத்தையும் ஆளுநரே ஏற்று வருகிறார்.

The post தமிழக ஆளுநர் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்படவில்லை: கவர்னர் மாளிகை மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Governor ,Governor House ,CHENNAI ,Guindy ,Governor's House ,
× RELATED சென்னை பெரம்பூரில் வங்கியின் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை திருட முயற்சி