- உலக மல்யுத்த கூட்டமைப்பு
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
- தில்லி
- இந்தியா
- கூட்டமைப்பு
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
- தின மலர்
டெல்லி: உலக மல்யுத்த கூட்டமைப்பு வழங்கிய 45 நாள் கெடு முடிவடைந்தும் , இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தப்படாததை அடுத்து , இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து உலக மல்யுத்த கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த, பாஜக எம்பியான பிரிஜ் பூஷண் சரண் சிங் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஒன்றிய அரசும், போலீசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என ஒரு மாதத்துக்கும் மேலாக மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கணைகள் டெல்லி ஜந்தர் மந்தரியில் போராட்டத்தை தொடங்கினர். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும் கைது நடவடிக்கை ஏதும் எடுக்கபடவில்லை.
இந்த போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நியாயம் கேட்டு பேரணி புறப்பட்ட வீரர், வீராங்கணைகளும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது பெரிய அளவில் சர்ச்சையானது. இதனை அடுத்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் தாங்கள் வென்ற பதக்கங்களை ஹரித்வார் கங்கை ஆற்றில் வீசி எறிந்து எதிர்ப்பை காட்ட முயன்றனர். விவசாய சங்க தலைவர் நரேஷ் தியாகத் வந்து 5 நாள் அவகாசம் வழங்கும்படி கேட்டு பதக்கங்களை பெற்று கொண்டார். இதையடுத்து வீரர், வீராங்கணைகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில், ஒருங்கிணைந்த உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் தலையீட்டு, மல்யுத்த வீரர், வீராங்கணைகள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்தது. மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இறுதியாக ஒருங்கிணைந்த உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஐஓஏ) மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆகியவற்றின் ஒக் கமிட்டியிடம் இருந்து அடுத்த பொது கூட்டமைப்பு தேர்வு குறித்து கூடுதல் தகவல்கள் கோரும். இதற்கு 45 நாள் கெடு வழங்கப்படும். இதனை செய்ய தவறும் பட்சத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த சம்மேளத்தை சஸ்பெண்ட் செய்யும். மேலும் மல்யுத்த வீரர்களை ‛நியூட்ரல் பிளாக்’ உடன் போட்டியில் பங்கேற்க செய்யும் என பகிரங்கமாக இந்தியாவை எச்சரித்தது.
இதனை தொடர்ந்து உலக மல்யுத்த கூட்டமைப்பு வழங்கிய 45 நாள் கெடு முடிவடைந்தும் , இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தப்படாததை அடுத்து , இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து உலக மல்யுத்த கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது.
The post தேர்தல் நடத்தப்படாததை அடுத்து , இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து உலக மல்யுத்த கூட்டமைப்பு உத்தரவு appeared first on Dinakaran.

