×

வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா?: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டைபிரேக்கர் சுற்று தொடங்கியது..!!

அஜர்பைஜான்: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டைபிரேக்கர் சுற்று தொடங்கியுள்ளது. டைபிரேக்கர் சுற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, உலகின் முதல்நிலை வீரரான நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் விளையாடி வருகின்றனர். நேற்று நடந்த 2வது சுற்று டிராவில் முடிவடைந்ததை அடுத்து இன்று டைபிரேக்கர் சுற்று நடைபெற்று வருகிறது. ரேபிட் முறையில் நடக்கும் 3, 4ஆட்டங்கள் டிராவில் முடிந்தால் 5,6 ஆட்டங்கள் பிளிட்ஸ் முறையில் நடக்கும். ரேபிட் முறை ஆட்டங்களில் தலா 25 நிமிடங்களும், பிளிட்ஸ் முறையில் தலா 10 நிமிடங்களும் வழங்கப்படும்.

டைபிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்றால் உலகக் கோப்பையை வென்ற இளம்வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைப்பார். முதல் சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடனும், இரண்டாம் சுற்றில் கருப்பு நிறக் காய்களுடனும் விளையாடினார் பிரக்ஞானந்தா. டைபிரேக்கர் சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் மீண்டும் களமிறங்கியுள்ளார். நடப்பு தொடரில் உலகின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வீரர்களை வென்று பிரக்ஞானந்தா அசத்தினார். 20ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்தியர் நுழைந்துள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

The post வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா?: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டைபிரேக்கர் சுற்று தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Prakhjananda ,World Chess Championship Finals ,Azerbaijan ,World Chess Championship ,Prakhanananda ,Tamil Nadu ,Prakshananda ,Dinakaran ,
× RELATED செஸ் ஒலிம்பியாட்; 5வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி வெற்றி