
சென்னை: விபத்தில் இறந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இளம் வயதில் உயிரிழந்த சங்கரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 3 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 3 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
The post விபத்தில் இறந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.