×

இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர்

கர்நாடக மாநிலம், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஜூனியர் இன்ஜினியர்.

i) Civil: 5 இடங்கள் (பொது-4, எஸ்சி-1).

ii) Electrical: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).

வயது: 35க்குள். சம்பளம்: ரூ.35,400- 1,12,400.

தகுதி: சிவில்/ எலக்ட்ரிக்கல் பிரிவில் 55% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்துத்தேர்வு/ நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

https://recruitment.iisc.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.08.2023.

The post இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் appeared first on Dinakaran.

Tags : Indian Institute of Science ,Indian Institute of Sciences ,Bangalore, Karnataka State ,Dinakaran ,
× RELATED சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்