×

ஆளுநர் ரவியே திரும்பி போ!: கோவை வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்

கோவை: தமிழ்நாட்டின் மக்கள் நலனுக்கு அரசின் திட்டங்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டி கோவையில் பெரியாரிய , அம்பேத்காரிய, மார்க்சிய அமைப்பினர் கருப்பு கோடி ஏந்தி போராட்டம் நடத்தினர். கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் நிலையில் பல்கலைக்கழகம் செல்லும் வனவல்லி பகுதியில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு மக்கள் நலனுக்கு அரசின் திட்டங்களுக்கு எதிராக செயல்படுவதாக கண்டன முழக்கம் எழுப்பினர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு ஒப்புதல் தராதது தமிழ்நாடு தேர்வாணையக்குழு தலைவர் பொறுப்புக்கு அரசு பரிந்துரைத்தவர்களை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளாதது மாணவர்களிடம் சனாதனத்தை திணிப்பது பிளவு படுத்தும் கருத்துக்களை முன்வைப்பது போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் ஆளுநர் என்பவர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மக்கள் நல பணிகளை அமல்படுத்த வேண்டுமே தவிர அதற்கு முட்டுக்கட்டையாக இருக்க கூடாது என்று போராட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர். 100க்கும் மேற்பட்டோர் இந்த கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட நிலையில் அனைவரையும் தடுத்து போலீசார் கைது செய்தனர்.

The post ஆளுநர் ரவியே திரும்பி போ!: கோவை வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravie ,Tamil Nadu ,R.R. N.N. ,Ravi ,Govai ,Periyariya ,Ambedkariya ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...