×

காட்டுமன்னார்கோவில் அருகே அடுத்தடுத்த மரணத்தில் பீதி: கோயிலை சுற்றி கொடும்பாவி எரிப்பு..சேவல் பலியிட்டு வழிபாடு

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மாரியம்மன் ஆலையம் கட்டப்படாமல் பத்தியில் பல ஆண்டுகளாக நின்றதால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது. ஞானகாட்டுமன்னார் கோவிலை அடுத்த ஸ்ரீபூஷணம் அருகே ராமாவரம் கிராமத்தில் ஆணையன் காலனியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு 6 மாதங்களாக திடீரென 6க்கும் மேற்பட்ட நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உடல்நலக்குறைவு விபத்து இறந்ததால் அந்த பகுதியில் உள்ள மகாமாரியம்மன் கட்டடம் கட்டப்படாமல் பத்தியில் நின்ற நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறதோ என்று பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றால் அகால மரணம் இருக்காது என்ற நன்னம்பிக்கையில் தற்போது கோவில் கும்பாபிஷேக பணிகளை தொடங்கலாம் என்று இருந்த போது கடந்த 24 நாட்களில் 3 உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்த சம்பவம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் பூசாரிகள் சிலரின் அறிவுரையின் பேரில் கிராமத்தில் கொடும்பாவி எரிப்பு எனப்படும் சம்ரதாய நிகழ்வினை கோவிலை சுற்றி நடத்தப்பட்டும் சேவல் பலி கொடுத்தும் வினோத வழிபாடுகளை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர்களில் 14 வயது மற்றும் 12 வயது உட்பட்ட குழந்தைகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

The post காட்டுமன்னார்கோவில் அருகே அடுத்தடுத்த மரணத்தில் பீதி: கோயிலை சுற்றி கொடும்பாவி எரிப்பு..சேவல் பலியிட்டு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Kodumbavi ,Cuddalore ,Cuddalore District Mariamman ,Kattumannarkovil ,Kotumbavi ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!