×

விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக வெளியே வந்தது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ அதிகாரப்பூர்வ தகவல்

பெங்களூரு: விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக பிரக்யான் ரோவர் வெளியே வந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் தனிமங்களையும், தாதுக்களையும் கண்டறியும் வகையில் ரோவர் ஆய்வு நடத்த உள்ளது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் எல்எம்வி3, எம்4 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

லேண்டர் அனுப்பும் தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வந்தனர். லேண்டரை தரையிறக்கும் நிகழ்வுக்காக வழிமுறைகள் ஏற்கெனவே பதிவேற்றப்பட்டது. இந்த வழிமுறைகளை ஆரம்பித்து வைக்கும் பணி தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து நேற்று சரியாக 5.44 மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி தொடங்கியது. லேண்டர் நிலவில் இருந்து 30கி.மீ உயரத்தில் இருந்தபோது தரையிறக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து சரியாக 6.03 மணிக்கு நிலவில் சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறங்கியது.

இந்த வரலாற்று சாதனை வெற்றிக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் உலகெங்கும் உள்ள அனைத்து அணைத்து இந்தியர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக பிரக்யான் ரோவர் வெளியே வந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் தனிமங்களையும், தாதுக்களையும் கண்டறியும் வகையில் ரோவர் ஆய்வு நடத்த உள்ளது.

The post விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக வெளியே வந்தது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ அதிகாரப்பூர்வ தகவல் appeared first on Dinakaran.

Tags : Pragyan ,Vikram ,ISRO ,Bengaluru ,Vikram lander ,Pragyan Rover ,Dinakaran ,
× RELATED 6 கண்களும் ஒரே பார்வை: விமர்சனம்