×

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக ₹37 லட்சம் பறிமுதல்

தண்டையார்பேட்டை, ஆக. 24: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் நடைமேடை 3ல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் வந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அவரை காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், பெங்களூரு கவுடா லேவுட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (53) என்பது தெரியவந்தது. அவர் ₹25 லட்சத்தை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் கொடுக்க வந்ததாக தெரிவித்தார். ஆனால், அவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நேற்று ஐதராபாத்தில் இருந்து சென்ட்ரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஒருவரிடம் உரிய ஆவணம் இன்றி ₹11 லட்சத்து 98 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த வாசு (42) என தெரிந்தது. தங்க சாலை தெருவில், நகை தொழில் செய்து வருவதாகவும், அதற்காக பணம் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார். அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ₹36.98 லட்சத்தை சென்ட்ரல் ரயில்வே பொறுப்பு ஆய்வாளர் சிவனேசன் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

The post சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக ₹37 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Central Railway Station ,Thandaiyarpet ,Railway Security Force ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்