×

கும்மிடிப்பூண்டி அருகே கீழ்முதலம்பேடு ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்டத்தில் 607 பேருக்கு ₹2.24 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

கும்மிடிப்பூண்டி, ஆக. 24: கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ்முதலம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 607 பயனாளிகளுக்கு ₹2.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். கீழ்முதலம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற இந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் வரவேற்றார். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் சிவாஜி, சேகர், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தகுமார், மணிபாலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் மாலதி குணசேகரன், கிழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் நமச்சிவாயம், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதாம்மா முத்துசாமி, நகர தலைவர் பரிமளம், கவுன்சிலர் ஜெயந்தி கஜா, ஜோதி, மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், கதிரவன் ரவி, பேருர் செயலாளர் அறிவழகன், துணை தலைவர் கேசவன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தமிழரசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் தொடர்பு முகாமை ஒட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கால்நடை பராமரிப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தோட்டக் கலை மற்றும் மலை பயிர்கள் துறை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற கண்காட்சியை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் தங்கள் துறைகளின் அரசு திட்டங்கள் குறித்து திட்ட விளக்க உரையாற்றினர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் 153 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், 25பயனாளிகளுக்கு உட்பிரிவு மனை பட்டாக்களும், ஒட்டக்கலை துறை சார்பில் 4 பயனாளிகளுக்கும், வேளாண்மை துறை சார்பில் 11 பயனாளிகளுக்கும், பழங்குடியின மக்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்தில் 5 பயனாளிகளுக்க 27,87,430 ரூபாய் மதிப்பில் வீடு கட்டவும், இரண்டு பெண் குழந்தைகள் உதவி தொகை 5 பேருக்கும், விபத்து நிவாரணத் தொகை 16 பேருக்கும், ஊத்துக்கோட்டை வட்டத்தை சேர்ந்த 388 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் என 607 பேருக்கு ₹2.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வின் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலர்கள் சாந்தி, மணிசேகர், மண்டல துணை வட்டாட்சியர் ரதி, வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, வருவாய் ஆய்வாளர் பொன்னி, ஊராட்சி செயலர் பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் ஜோதி பிரகாசம் உள்ளிட்ட 1000க்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரித்தி நன்றி கூறினார்.

The post கும்மிடிப்பூண்டி அருகே கீழ்முதலம்பேடு ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்டத்தில் 607 பேருக்கு ₹2.24 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kilimulampedu Panchayat ,Kummidipoondi ,Minister ,R.Gandhi. ,Kilimulambuedu panchayat ,Kilimulambudu panchayat ,R.Gandhi ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...