×

நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 1,485 வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியலை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டார்

நெல்லை, ஆக. 24: நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,485 வாக்குச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டார். நடப்பு மக்களவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. இதையடுத்து 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. இதற்காக, 2024 ஜனவரி 1ம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் 2023 ஜூன் 1 முதல் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தின் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது: வரைவு வாக்குச்சாவடி பட்டியலின் அடிப்படையில் வாக்குச் சாவடிகள் பகுப்பாய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1,484 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளை பிரித்து புதிய வாக்குச் சாவடிகள் அமைத்தல், பழுதடைந்த வாக்குச்சாவடிகளை மாற்றுதல், வாக்குச் சாவடிகள் அமைவிட மாற்றம் மற்றும் பெயர் திருத்தம் ஆகிய பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கீழ்க்கண்ட விவரப்படி வாக்குச் சாவடிகள் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளன.

எனவே அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் யாருக்காவது ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அல்லது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டரிடம் 7 நாட்களுக்குள் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகம்மது சபீர் ஆலம், தேர்தல் தாசில்தார் பாலகிருஷ்ணன், தாசில்தார்கள் பாளை. சரவணன், நெல்லை வைகுண்டம் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் மத்திய மாவட்ட திமுக வக்கீல் அணி தலைவர் ராஜா முகம்மது, அதிமுக தச்சை பகுதி செயலாளர் சிந்து முருகன், இந்திய கம்யூ. முத்துகிருஷ்ணன், பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

பாளையில் குறைவு நெல்லையில் அதிகம்
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை படித்தவர்கள் நிறைந்த பாளையங்கோட்டையில் மாவட்டத்திலேயே குறைவாக 270 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதே நேரத்தில் கிராமங்கள் நிறைந்த நெல்லை தொகுதியில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 309 வாக்குச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன. நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் தலா 306 வாக்குச்சாவடிகள் உள்ளன.

The post நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 1,485 வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியலை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Karthigayan ,Nedle district ,Paddy ,Nelly district ,Paddy District ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...