×

தூத்துக்குடியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் கனிமொழி எம்பி திறந்து வைத்தார்

தூத்துக்குடி, ஆக. 24: தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். தூத்துக்குடி டபுள்யுஜிசி. சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உதவி செயற்பொறியாளர்களுக்கான அலுவலக கட்டிடத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், கனிமொழி எம்பி திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான்தோழன், துணை மேயர் ஜெனிட்டா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கங்கா பரமேஸ்வரி, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் கனிமொழி எம்பி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MP Kanimozhi ,Assistant Executive Engineer ,Public Works ,Tuticorin ,Kanimozhi ,Works ,Thoothukudi ,Assistant Executive Engineer of ,Public ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா...