×

முதலமைச்சருக்கு புகார் எதிரொலி டீக்கடைக்கு பாக்கி தொகையை வழங்கிய கரியாலூர் போலீசார்

கல்வராயன்மலை, ஆக. 24: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் சுமார் 172 கிராமங்கள் உள்ளது. இதில் சுமார் 150 கிராமங்களுக்கு கரியாலூர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் சுமார் 10 போலீசார் பணியில் உள்ளனர். மேலும் கல்வராயன்மலையில் சாராய ரெய்டு போன்ற பணிக்கு அவ்வப்போது 50க்கும் மேற்பட்ட போலீசார் வந்து செல்வது வழக்கம். இவர்கள் டீ சாப்பிடுவது என்றால் கரியாலூர் காவல் நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் தான் குடிப்பார்கள். ஆனால் டீ காசு காவல் நிலைய கணக்கில் சேர்ந்து விடும். இது மாத கணக்கில் சேர்ந்து ரூ.7,000 பாக்கி இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பாக்கித்தொகையையும் தராமல் காலம் தாழ்த்தியதாகவும் தெரிகிறது.இதுகுறித்து டீக்கடையின் உரிமையாளர் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு, கள்ளக்குறிச்சி எஸ்.பி. உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியுள்ளார். மேலும் இந்த டீக்கடை பாக்கி சம்பந்தமான செய்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் உத்தரவின் பேரில் கரியாலூர் போலீசார் சம்பந்தப்பட்ட டீக்கடை உரிமையாளருக்கு பாக்கித்தொகை ரூ.7,000ஐ நேரில் சென்று வழங்கினர்.

The post முதலமைச்சருக்கு புகார் எதிரொலி டீக்கடைக்கு பாக்கி தொகையை வழங்கிய கரியாலூர் போலீசார் appeared first on Dinakaran.

Tags : Kariyalur police ,Teeksha ,Minister ,GalvarayanMalai, Ga ,Galvarayanmali district ,Kallakkurichi ,Teaksha ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...