×

புனித அல்போன்சா கல்லூரியில் ரத்த தான முகாம்

கருங்கல், ஆக.24 : கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமில் சிறப்பு விருந்தினராக டாக்டர் சாஸ்தா, ரமா ஆகியோர் கலந்து கொண்டு ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர். கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் ரத்ததானம் செய்வதன் நன்மை குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக்கேல் ஆரோக்கியசாமி எஸ்டிபி ரத்த தானம் செய்தார்.பின்னர் 50க்கும் அதிகமான மாணவ மாணவிகள் ரத்த தானம் செய்தனர். கல்லூரி வளாக வழிகாட்டி அருட்தந்தை அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் மற்றும் பேராசிரியர்கள் ரத்ததானம் செய்த மாணவ மாணவிகளைப் பாராட்டினர். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் நன்றி கூறினார். இம்முகாமை இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பால்மணி மற்றும் குமரி மாவட்ட தலைமை மருத்துவமனை, கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

The post புனித அல்போன்சா கல்லூரியில் ரத்த தான முகாம் appeared first on Dinakaran.

Tags : Donation ,St. Alphonsa College ,Karungal ,St. Alphonsa Arts and Science College ,Susaipuram ,Dinakaran ,
× RELATED பல்கலை. அளவிலான கைப்பந்து போட்டி