×

ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

மதுக்கரை,ஆக.24:கோவை-பொள்ளாச்சி சாலையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இக்கோவில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் நிறைவடைந்து நேற்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குருமரகுருபர சுவாமிகள் தலைமையில் சிறப்பு வேள்வி, யாக பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.அதனை தொடர்ந்து இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மேல தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி புனித நீர் எடுத்துவரப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.இதனையடுத்து பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஈச்சனாரி விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் விழாவில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் விஜயலட்சுமி,கோவை மேயர் கல்பனா,துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட செயலாளர்கள் தளபதி முருகேசன்,கார்த்திக்,தொண்டாமுத்தூர் ரவி,எஸ்.பி.டவர்.பூபதி யாதவ், மயிலேரிபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் கோமதி திருமூர்த்தி, செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி, மதுக்கரை ஒன்றிய செயலாளர் விஜியசேகரன்,பகுதி செயலாளர் கார்த்தி வார்டு செயலாளர் ஈச்சனாரி மகாலிங்கம்,ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி,தேவராஜ்,மாரிசெட்டிபதி ராமராஜ்,உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதையடுத்து நேற்று இரவு 7 மணிக்கு தங்க தேர் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேக விழாவில் கோவை, மதுக்கரை, செட்டிப்பாளையம், மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு, சுந்தராபுரம், போத்தனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து விநாயகரை தரிசித்து சென்றனர்.

The post ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Echanari Ganesha ,Temple ,Kumbabhishek ,Madhukarai ,Echanari Vinayagar temple ,Coimbatore-Pollachi road ,Hindu Charities Department ,Echanari Vinayagar Temple Kumbabhishek ceremony ,
× RELATED ஜனவரி 22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம்;...