×

கீழ்பவானி வாய்க்கால் கரை பலப்படுத்தும் பணி தீவிரம்

சத்தியமங்கலம், ஆக.24: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகள் பாசனப்பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 3500 ஏக்கர் நிலங்களுக்கு நன்செய் பாசனத்திற்காக 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கீழ்பவானி வாய்க்காலில் கரையை பலப்படுத்துவதற்காக கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில் தற்போது தடுப்பு சுவர் அமைத்த பகுதிகளில் லாரிகள் மூலம் மண் கொட்டப்பட்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கீழ்பவானி வாய்க்காலில் அதிகபட்சமாக 2300 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் தற்போது கரை பலப்படுத்தும் பணி இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. விரைவில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வாய்க்காலின் முழு கொள்ளளவான 2300 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கீழ்பவானி வாய்க்கால் கரை பலப்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kilpawani Canal ,Sathyamangalam ,Kiliphavani canal ,Bhavanisagar dam ,Chennasamuthram branch ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...