×

116 தொழில் முனைவோர்களுக்கு உணவு பதப்படுத்தும் தொழில் பயிற்சி

தஞ்சாவூர், ஆக. 24: தஞ்சாவூர் மாவட்டத்தில் 116 தொழில் முனைவோர்களுக்கு உணவு பதப்படுத்தும் தொழில் பயிற்சி வழங்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் வருகின்ற ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு துவக்கவிழா மற்றும் இலச்சினை வெளியீட்டு விழா கடந்த 10ம்தேதி முதலமைச்சர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, தஞ்சாவூர் தேசிய உணவு தொழில் நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் பொன்விழா கூட்ட அரங்கில், சிறப்பு கருத்தரங்கம், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தை நெப்டம் இயக்குநர் டாக்டர். பழனிவேலு துவக்கி வைத்தார்.

அப்போது அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 116 தொழில் முனைவோர்களுக்கு உணவு பதப்படுத்தும் தொழில் பயிற்சி வழங்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவித்தார். இக்கூட்டத்தில், 300க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், மணிவண்ணன், வரவேற்புரை ஆற்றி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினர். இக்கருத்தரங்கில் நெப்டம் நிறுவனத்தில் பணியாற்றி வரும், இணை பேராசிரியர் வின்சென்ட் ஹேமா, உணவு பதப்படுத்தும் தொழில் குறித்தும், பேராசிரியர் சினிஜா பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் குறித்தும் உரையாற்றினர். முடிவில் பதிவாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

The post 116 தொழில் முனைவோர்களுக்கு உணவு பதப்படுத்தும் தொழில் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...