×

குக்கர், தேனிகாரரை கவிழ்த்துவிட்ட கட்சி தொண்டர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கரன்சியை வாரி இறைத்து, கட்சியை கரைத்து தொண்டர்களை பிரித்த நபர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர் மாவட்டத்தில் இலைக்கட்சி நடத்திய மாநாட்டால் ஹனிபீ மாவட்ட தேனிக்காரர் ஆதரவாளர்களுக்கு தூக்கம் போயிருச்சாம். தேனிக்காரர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மலைக்கோட்டை நகரில் தனது ஆதரவாளர்கள் தரப்பில் மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டுக்கு ஹனிபீ மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே கட்சிக்காரர்கள் போனாங்களாம். ஆனால் தூங்கா நகரில் சேலத்துக்காரர் தலைமையில் நடந்த இலைக்கட்சி மாநாட்டுக்கு ஹனிபீ மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போயிட்டாங்களாம்.

குறிப்பாக, தேனிக்காரரின் ஆதரவு மாவட்ட செயலாளரான முன்னாள் எம்பி வசிக்கும் பகுதிகளில் இருந்து மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தூங்காநகர் மாநாட்டிற்கு சென்றது சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, தேனிக்காரர் தரப்பு மாவட்ட செயலாளரின் சொந்த ஊரில் இருந்த அவரது மற்றும் குக்கர்காரரின் ஆதரவாளர்கள் பலர், இலைக்கட்சிக்கு தாவிட்டாங்களாம். இந்த தாகவல் மாநாடுக்கு முந்தைய ஒரு வாரத்தில் நடந்தது என்பதுதான் இதுல ஹைலைட்டே… தன் சொந்த மாவட்டத்திலேயே தன் ஆதரவாளர்கள், குக்கர் ஆதரவாளர்கள் தங்களை கவிழ்த்துவிட்டடனர் என்று ேதனிகாரர் புலம்புகிறாராம்…

இதுக்கெல்லாம் காரணம் கரன்சிதான், நாமும் எவ்வளவு தான் கரன்சியை இறைப்பது… இனிமேல் கரன்சியை இறைத்து முக்கிய நபர்களை நம் பக்கம் வைத்திருக்க வேண்டும் என்று தேனிகாரர் முடிவு செய்துள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ கொங்குகாரருக்கு யாரு ஆப்பு வச்ச புதுத்தலைவர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் தூங்காநகரத்து மாநாட்டால் மகிழ்ச்சியில் இரவிலும் தூக்கம் வராமல் தவிப்பவர் சேலத்து தலைவர் தானாம். கரன்சியை தண்ணீரா செலவு செஞ்சி நினச்சதை நிறைவேற்றிக்கிட்டாராம். தான் ஒருவரே தலைவர் என்பதை சொல்லிகிட்டே ரெண்டாம் கட்ட தலைவரான கொங்குகாரருக்கு பெரிய ஆப்பு ஒன்றை வச்சிட்டாராம்.

மாநாட்டுக்கு பொருளுதவிய டக்கு டக்குன்னு செஞ்சது இவர்தான்னு மேடையிலே சொல்லி நன்றி ெதரிவிச்சாராம். ஆனா அது நன்றியில்லை. பெரிய ஆப்புன்னு கட்சிக்காரர்களே சொல்லிக் கிட்டிருக்காங்க. மாஜி மந்திரியான இவர், ஒரு துடைப்பத்தை இருநூற்றைம்பதுக்கு வாங்கி சிக்கியவராம். இவ்வாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பினாயில் வாங்கியது எல்லாமே இவரது கட்டுப்பாட்டில்தான் இருந்துச்சாம். இது தொடர்பாக வழக்கு ஒன்று கோர்ட்டில் இருக்குதாம். அப்படிப்பட்டவர், மீண்டும் நாங்கள் தான் ஆட்சிக்கட்டிலில் அமர்வோமுன்னு சொல்லி சொல்லி பல கோடிகளை கறந்தாராம். அது அத்தனையும் சேலம் பக்கம் திருப்பிவிட்டாராம். அந்த புதுத்தலைவரும் நிதி பொறுப்பை மைத்துனர் மற்றும் சன்னிடம் ஒப்படைச்சிருந்தாராம். இவர்கள்தான் யார் யாருக்கு எப்படி கரன்சி போகணுமுன்னு பிரிச்சி விட்டாங்களாம்.

ஆட்சியில இல்லாமலேயே இவ்வளவு கரன்சி வருதுன்னா, தனக்கு தெரியாம கொங்குகிட்ட எவ்வளவு போயிருக்கும் என்ற கேள்வி சேலம் பக்கம் கொஞ்சம் அதிகமாவே இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மதுரை மாநாட்டுல சாப்பாடு விஷயத்துல திட்டமிட்டு சொதப்பியதா சேலம்காரர் யாரை நினைக்கிறாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ தன் பெயரில் கடைசி இரண்டு எழுத்து ராஜ் என்று முடியும் மாஜி அமைச்சர் மனுநீதி சோழன் மாவட்டத்துல இருக்காரு… இவர் கடந்த 10 ஆண்டுகால இலை ஆட்சியில உணவு அமைச்சரா இருந்தாரு… அப்போ பெருந்தொகைய சுருட்டியதால சொத்து குவிச்சதா வழக்கு வந்து சேர்ந்துச்சு… இப்போ அவரு சேலத்துகாரரு அணியில இருக்குறாரு…

ஆட்சிகாலத்துல ஏகத்துக்கும் சுருட்டியதால அவர மதுர மாநாட்டுல உணவு குழு பொறுப்பாளரா சேலத்துக்காரர் நியமிச்சாரு. இதனால மாநாட்டுல அறுசுவை உணவு தரப்போவதாவும், 10 ஆயிரம் பேரு உணவு தயாரிக்கறதாவும் பெருமை பேசிக்கிட்டு இருந்தாரு… ஆனா மாநாட்டுல கருகிய மற்றும் வேகாத உணவு மற்றும் உப்பு, உரப்பு இல்லாத உணவுதான தந்தாங்க.. அத வாங்குன தொண்டர்கள் திட்டி தீர்த்து குப்பையில வீசிட்டு போனாங்க. இதனால கட்சியோட பேரு நாறிப்போச்சுன்னு சேலத்துகாரரு ஆத்திரத்துல இருக்குராறாம். 10 வருஷமா உணவு அமைச்சரா இருந்தவருக்கு உணவ சரியா தயாரிக்க தெரியாதா… இல்ல தேனிக்காரருக்கு ஆதரவா, தனக்கு எதிரா வேணுமுன்னே இப்படி செஞ்சாரான்னு சேலத்துகாரருக்கு இப்போ சந்தேகம் வலுத்திருக்காம்..

இலை கட்சி மாநாட்டுல உயிரிழப்புகள், உணவு இழப்புகள்னு ஏகப்பட்ட புகார்கள், புலம்பல்கள் இன்னும் அடங்குனமாதிரி தெரியல. இலை கட்சி தொண்டர்களின் புலம்பல்கள் தொடர்ந்துகிட்டுத்தான் இருக்குது. இப்ப, பண இழப்புன்னு புலம்பல் சத்தம் கேட்கத்தொடங்கியிருக்குது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி அமைச்சர் வீரமானவரிடம் மாநாட்டு செலவுக்கான கரன்சியை கேட்க தயங்குவது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியின் மாநாட்டுக்கு மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல இருந்தும் இலைகட்சிக்காரங்க பஸ்கள், ேவன்கள் வெச்சிகிட்டு போனங்க. இந்த மாநாட்டுக்கு போகுற வாகனங்களுக்கு ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் மாவட்டம் சார்புல நிதி ஒதுக்கீடு செய்து அறிவிச்சிருந்தாங்களாம்.

ஆனா, சில ஒன்றியங்கள்ல, சொன்னமாதிரி நிதி எதையும் கொடுக்கலையாம். இலை பொறுப்பாளருங்க சொந்த பணத்தை போட்டு, தொண்டர்களை அழைச்சிகிட்டு போனாங்களாம். இதுல மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பாடியான ஊர்ல இருக்குற மாஜி எம்எல்ஏ ஒருத்தரு சொந்த பணத்தை சில லட்சங்களை செலவு செஞ்சாராம். இப்ப, மாநாடும் முடிஞ்சு போச்சு, செலவு செஞ்ச பணத்தை மாஜி மந்திரிகிட்ட இருந்து எப்படி வாங்குறது தெரியலையேன்னு புலம்பி வர்றாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post குக்கர், தேனிகாரரை கவிழ்த்துவிட்ட கட்சி தொண்டர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Kukar ,Thenikar ,Uncle ,Peter ,Dunga Nagar ,Cooker ,Thenikaran ,
× RELATED பூமர் அங்கிள் விமர்சனம்