×

அதிமுக மிகப்பெரிய தடுமாற்றத்தில் உள்ளது: திருமாவளவன் பேச்சு

சென்னை: அதிமுக மிகப்பெரிய தடுமாற்றத்தில் இருப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் எ.திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்: விசிக கட்சி தொடங்கியபோது அனைத்து கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகளை சந்தித்தது. மேலும், காவல் துறையின் நெருக்கடிக்கு மத்தியில் நாம் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். 2011ல் மக்கள் நலக் கூட்டணி அமைத்தோம். அதிமுக, இன்று மிகப் பெரிய தடுமாற்றத்தில் உள்ளது. அந்த, கட்சி இன்னும் எத்தனை நாள் இயங்கும் என்பதை நாம் தீர்மானிக்க முடியும். ஆர்எஸ்எஸ், பஜ ஆகியவற்றுடன் நேர்மையாக அரசியல் நடத்துபவர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டார்கள். அவர்களை, சுட்டுப்போட்டாலும் நாட்டில் சாதியை ஒழிக்க மாட்டார்கள். காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சாதியை ஒழிக்க என்றார்.

The post அதிமுக மிகப்பெரிய தடுமாற்றத்தில் உள்ளது: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,CHENNAI ,Thol Thirumavalavan ,
× RELATED சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த...