×

அண்ணா பல்கலையில் பி.ஆர்க் கலந்தாய்வு: 31ம் தேதியுடன் முடிகிறது

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.ஆர்க். பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 37 கட்டிடவியல் கல்லூரிகளில் 1,467 இளநிலை பி.ஆர்க். பட்டப்படிப்பு இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு 2 ஆயிரத்து 485 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1,449 பேருக்கு பொது கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, இவர்களுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு கடந்த 21ம் தேதி தொடங்கியது. பொதுப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் 951 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அதில் 813 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதேபோல், 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்ற 41 பேரில், 29 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 842 பேருக்கு இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கலந்தாய்வு வரும் 31ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.

The post அண்ணா பல்கலையில் பி.ஆர்க் கலந்தாய்வு: 31ம் தேதியுடன் முடிகிறது appeared first on Dinakaran.

Tags : B.Arch ,Anna University ,Chennai ,Anna University B.Arch ,Anna ,University ,Dinakaran ,
× RELATED இணையத்தில் வெளியீடு அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்