×

கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாதி சங்க தலைவரிடம் பெண் டிஎஸ்பி சமரசம் பேசும் ஆடியோ: சமூக வலைதளங்களில் வைரல்; உறவுமுறையில் பேசியதால் அதிர்ச்சி

சென்னை: கொலை வழக்கு ஒன்றில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜாதி சங்க தலைவர் ஒருவரிடம், பெண் டிஎஸ்பி வினோதினி பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
டிஎஸ்பி வினோதினி- ஜாதி சங்க தலைவர் பேசும் ஆடியோ விவரம் வருமாறு:
பெண் டிஎஸ்பி: நான் டிஎஸ்பி வினோதினி பேசுகிறேன்.
கரு.ஆதிநாராயணன்: வணக்கம் மேடம். சொல்லுங்க..
பெண் டிஎஸ்பி: நல்லா இருக்கீங்களா.
கரு.ஆதிநாராயணன்: நன்றாக இருக்கிறேன் மேடம்.
பெண் டிஎஸ்பி: அண்ணா.. நீங்க என்னை பற்றி ஏதோ பேசினதாக சொன்னாங்க. அண்ணா, நான் அப்படி பேசி இருக்க வாய்ப்பு இல்லை. நான் இருந்தவரை உங்களுக்கு சப்போர்ட் செய்தேன். நான் உங்களை பற்றி ஏதோ பேசினதா சொன்னாங்க. யாரோ சொன்னதை, நீங்கள் நான் பேசினதா தப்பா புரிஞ்சுகிட்டீங்க. அதான் நான் நேர்லயே பேசலாம் என்று இப்போது பேசுறேன்.
கரு.ஆதிநாராயணன்: இல்லை மேடம். அந்த வழக்கில், நான் தானே உங்களிடம் ‘அக்யூஸ்ட்’ (குற்றவாளிகள்) பிடித்து கொடுத்தேன். ஆனால் நீங்கள், கொலை வழக்கின் எப்ஐஆரில் என் பெயரை எப்படி சேர்த்தீங்க மேடம்.
பெண் டிஎஸ்பி: நான் எங்க உங்கள் பெயரை சேர்த்தேனா…
கரு.ஆதிநாராயணன்: நீங்கள் சேர்க்காமல் வேறு யார் மேடம் சேர்த்தது. இப்படி என்று தெரிந்திருந்தால், நான் அக்யூஸ்டை உங்களிடம் கொடுக்காமல் முத்துவிடமே கொடுத்து இருப்பேன். ராமகிருஷ்ணனை அனுப்பியதே நீங்கள் தானே.
பெண் டிஎஸ்பி: நான் உங்கள் பெயரை சேர்க்கவில்லை. நீங்கள் என்னை தவறாக புரிந்துகொண்டு பேசறீங்க.
கரு.ஆதிநாராயணன்: இல்ல மேடம். இந்த சமூகத்திற்காக நான் பாடுபடுகிறேன்.
பெண் டிஎஸ்பி: நான் அங்கு இருக்கும் வரைக்கும் உங்களுக்கு நான் சப்போர்ட் தான் செய்தேன். நான் இருந்தவரை உங்களை யாரையும் தொடக்கூட விடாத இடத்தில் வைத்து இருந்தேன்.
கரு.ஆதிநாராயணன்: இருந்தாலும், எப்ஐஆரில் நீங்கள் என் பெயரை சேர்த்து இருக்கீங்களே.
பெண் டிஎஸ்பி: எப்ஐஆர் நான் போடாதபோது, நீங்கள் எப்படி அப்படி சொல்றீங்க. நான் எப்ஐஆர் போடுவதாக இருந்தால், உங்களை நேரில் அழைத்து பேசுவேனா.
கரு.ஆதிநாராயணன்: ஒரு டிஎஸ்பியால் எப்ஐஆர் போட முடியாது என்று எனக்கு தெரியும். முத்துதான் எப்ஐஆர் போட்டாரு. அக்யூஸ்டை நான் தானே மேடம் உங்களிடம் ஒப்படைத்தேன். வேறு யாராவது உங்களிடம் ஒப்படைத்தார்களா.
டிஎஸ்பி: நீங்கள் கொடுத்த அக்யூஸ்டை தான், நான் அழைத்து வந்த ஒருவரிடம் ஒப்படைத்தேன். நான் வந்து ஒருவரை ரிமாண்ட் செய்ய முடியுமா சொல்லுங்க.
கரு.ஆதிநாராயணன்: நான் காலையிலேயே கோர்ட்டுல ரிட் பைல் செய்து இருக்கேன். அது எப்படி என்றால், 13 அக்யூஸ்டின் சிடிஆர் பைலை, சப் டிவிஷன் டிஎஸ்பியாக இருந்த உங்களுக்கு நான் அனுப்பினேன். பிஎஸ்என்எல் செல்வம் என்பவரின் மூலம் என்னிடம் ஒரு ஆள் ரூ.3 லட்சம் பணம் கேட்கிறார் அந்த முத்து. அவன் கொடுக்க மறுத்ததால் அவனை வழக்கில் சேர்க்கிறார். ஜாதி வழக்கில் என்னையும் சேர்க்கிறார்கள் என்றால், உங்களிடம் நான் அக்யூஸ்டை ஒப்படைக்கும்போது அவனை அடிக்காதீங்க என்று சொல்லி அனுப்பினேன். அன்று, நீங்கள் இதோ வருகிறேன் என்று சொன்னீர்கள். ஆனால் நீங்கள் வரவில்லை. நீங்கள் சொன்னீர்கள் என்பதால் நான் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்துவிட்டு போட்டு எடுத்துக்கிறேன். நான் ராமகிருஷ்ணனிடம் சொன்னதுக்கு அப்புறமும், என் பெயரை நீங்கள் சேர்த்து விட்டுள்ளீர்கள். சார்ஜ் ஷீட் பார்த்து, அதன் பிறகு என்னை அதில் இருந்து நீக்கி இருக்கலாம்.
பெண் டிஎஸ்பி: நான் சார்ஜ் ஷீட்டே போடவில்லை. நான் அங்கே இருக்கும் வரை உங்களை வழக்கில் சேர்க்காமல் தான் வைத்து இருந்தேன். நான் இருக்கும் வரைக்கு உங்களை கைது செய்தார்களா? சொல்லுங்க.
கரு.ஆதிநாராயணன்: எல்லாம் சரி தான் மேடம். ஒருவர் மீது 302 வழக்கு விழுந்தால், அதனால் அவனுடைய வாழ்க்கை என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியாதா.
பெண் டிஎஸ்பி: நீங்கள் தான் லிஸ்ட் கொடுத்தீங்க என்று நான் எஸ்பியிடம் சொல்லி தான் பைலை ஒப்படைத்தேன். சம்பவம் நீங்கள் பைல் ஒப்படைக்கும் நாளில், டிஐஜி மீட்டிங். அதனால் நான் வரமுடியவில்லை. இதுபற்றி நான் டிஐஜி மற்றும் எஸ்பியிடம் உங்களை பற்றி சொல்லி, யாரையும் உங்களை தொடவிடாமல் வைத்து இருந்தேன். இது வரைக்கும் நான் தான் உங்களுக்கு பாதுகாப்பாக தான் இருந்தேன். ஆனால், நீங்கள் ரிட் போடுங்க. ஆனால் நீங்கள் பேசினது ரொம்ப வருத்தமாக இருக்கு.
கரு.ஆதிநாராயணன்: நீங்கவேற. நான் வந்து இன் பர்சனாக வாதாடப்போகிறேன். அப்ப நான் நிறைய கேள்விகள் கேட்பேன். அந்த ராமகிருஷ்ணன் என்னிடம் ரொம்ப கெஞ்சியும் கூட நான் அந்த போட்டே கொடுக்கவில்லை. என்னை கைது செய்கிறார்கள். அந்த தேதியில் என் வழக்கு வருகிறது.
பெண் டிஎஸ்பி: என்னை நீங்கள் பார்க்க வரும் போது கூட எங்கள் பிள்ளைங்க சிவில் சர்வீஸ் படிப்பதாக சொன்னீங்க. நான் ரொம்ப நல்லது, படிக்கட்டும் என்று தானே சொன்னேன். ஆனால், நீங்கள் வந்து யாரு உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்களோ அவங்களுக்கு தான் எதிராக செய்யறீங்க.
கரு.ஆதிநாராயணன்: மேடம் இந்த விஷயத்தை பொறுத்தவரைக்கும் நிஜமாகவே, நான் இதில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் இழுப்பேன். நீங்கள் என் மீது கொலை வழக்கு போட்டு உள்ளீர்கள். அதில் நீங்கள் காண்பித்துள்ள எந்த ஒரு விஷயமும். உண்மை கிடையாது.
பெண் டிஎஸ்பி: நான் போடவில்லை. நான் வந்து உங்கள் மீது ஒரு நல்ல பிரியமும், நல்ல மரியாதையும் வைத்து இருந்ததால் தான் நான் போன் ெசய்து தகவல் சொன்னேன். நீங்கள் எங்க அலுவலகத்தில் வந்து பேசியதாக சொன்னது எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. வழக்கமாக நான் யாருக்கும் போன் செய்ய மாட்டேன். நீங்கள் உங்கள் குரூப்பில் சேர்த்து வைத்து உள்ளீர்கள். அதனால் தான் நான் உங்களுக்கு போன் செய்து சொன்ேனன்.
கரு.ஆதிநாராயணன்: மேடம் நான் நேரில் வரும் போது, உங்களை வந்து பார்க்கிறேன்.
டிஎஸ்பி: வாங்க…. வாங்க…. நன்றி. இவ்வாறு ஆடியோவில் பேசியுள்ளனர். கொலை வழக்கு ஒன்றில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஒரு சமூக தலைவர் ஒருவரிடம் டிஎஸ்பி வினோதினி பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சட்டம் தனது கடமையை செய்யும் என்று சொல்வார்கள். ஆனால் சட்டம் தனது சமூகத்திற்கு ஆதரவாக செய்கிறது என்று இந்த பெண் டிஎஸ்பி வினோதினி நிரூபித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

The post கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாதி சங்க தலைவரிடம் பெண் டிஎஸ்பி சமரசம் பேசும் ஆடியோ: சமூக வலைதளங்களில் வைரல்; உறவுமுறையில் பேசியதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Jati Sangh ,CHENNAI ,Vinothini ,Dinakaran ,
× RELATED குழந்தையுடன் தாய் மாயம்