×

கிளீவ்லேண்ட் டென்னிஸ்: காலிறுதியில் கார்சியா

கிளீவ்லேண்ட்: அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் நடக்கும் கிளீவ்லேண்ட் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, பிரான்ஸ் நட்சத்திரம் கரோலின் கார்சியா தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டியர்ன்ஸுடன் (21 வயது, 58வது ரேங்க்) நேற்று மோதிய கார்சியா (29 வயது, 7வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

அதே வேகத்துடன் 2வது செட்டில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய அவர் 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 37 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் லெய்லா பெர்னாண்டஸ் (கனடா), ஜின்யு வாங், லின் ஸூ (சீனா) ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post கிளீவ்லேண்ட் டென்னிஸ்: காலிறுதியில் கார்சியா appeared first on Dinakaran.

Tags : Cleveland Tennis ,Garcia ,Cleveland ,Cleveland Tennis Series ,Ohio, USA ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா