×

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி. கடந்த 2018ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் பரம்பரையாகத்தான் நியமிக்க வேண்டும் என்றும், தனி நீதிபதியின் உத்தரவு உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது என்றும் வாதிடப்பட்டது. இத்தகைய சூழலில் மேல்முறையீட்டு மனுவாக, உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. கோயில் ஆகமவிதிப்படி தேர்ச்சி பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.இத்தகைய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மேலும் இத்தீர்ப்பை அமல்படுத்த உரிய முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Indian Communist ,Supreme Court ,Chennai ,State Secretary of ,Communist Party of India ,Mutharasan ,Salem Sukhavaneswarar temple ,
× RELATED விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம்...