×

தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அரசுக்கு 25ம் தேதி பாராட்டு விழா டாக்டர்கள் சங்கம் முடிவு

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச்., தற்காலிக துப்புரவுப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும், ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்கள்,ரூ 1500 மட்டுமே மாதத் தொகுப்பூதியமாக பெற்றுக் கொண்டு, தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ 15, 000 ஊதியம் கிடைத்திடும் வகையில், அவர்களைபல்நோக்கு மருத்துவப் பணியாளர்களாக பணிநியமனம் செய்து உதவியுள்ளது. ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றியமைக்காக, தமிழ்நாடு அரசிற்கு நன்றி பாராட்டும் விழா வரும் 25ம் தேதி காலை 10.00 மணி அளவில் சென்னை சைதாப்பேட்டை உள்ள தனியார் மண்டபத்தில் நடத்த உள்ளோம்.

The post தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அரசுக்கு 25ம் தேதி பாராட்டு விழா டாக்டர்கள் சங்கம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Doctors Association for Social Equality and Government Primary Health Center ,Press Forum ,Chepauk, Chennai ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...