×

தேஜஸ் விமானத்தில் அஸ்திரா ஏவுகணை சோதனை

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானமான தேஜசில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கோவா கடற்கரையில் 20ஆயிரம் அடி உயரத்தில் தேஜாஸ் விமானத்தில் இருந்து அஸ்த்ரா ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனையின் அனைத்து நோக்கங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘‘தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் இருந்து அஸ்த்ரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். ஏவுகணை சோதனையானது தேஜாஸின் போர் திறனை அதிகரிக்கும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்களை சார்ந்திருப்பதை குறைக்கும்” என்றார்.

The post தேஜஸ் விமானத்தில் அஸ்திரா ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.

Tags : Tejas ,New Delhi ,
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...