×

டெல்லியில் ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சஸ்பெண்ட்

புதுடெல்லி: டெல்லியில் ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் இயக்கப்பட்ட விவகாரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டெல்லியில் இருந்து மேற்குவங்கத்தின் பாக்டோக்ரா நகருக்கு செல்ல விஸ்தாரா நிறுவனத்தின் விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த விஸ்தாரா விமானம் ஓடுபாதையில் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது. அதேசமயம் டெல்லி பாக்டோக்ரா விமானமும் அதே ஓடுபாதையில் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அகமதாபாத் டெல்லி விஸ்தாரா விமானத்தில் இருந்த பெண் விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பினார். இதையடுத்து டெல்லி பாக்டோக்ரா விமான புறப்பாடு நிறுத்தப்பட்டு, மற்றொரு ஓடுபாதைக்கு மாற்றி விடப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கவன குறைவாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

The post டெல்லியில் ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Delhi… ,Dinakaran ,
× RELATED டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி...