×

பாஜவில் பழைய தலைவர்களுக்கு முக்கியத்துவம் இல்லையா?.. அசாம் முதல்வர் மறுப்பு

புதுடெல்லி: அசாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது.மாநிலத்தில் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்களுக்கும் புதிதாக சேர்ந்துள்ள கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பதவி தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுபற்றி ஹிமந்தா பிஸ்வாசெய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘ கட்சியில் பழைய உறுப்பினர், புதிய உறுப்பினர்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. மிஸ்டு கால் அழைப்பு விடுத்து யார் வேண்டுமானாலும் பாஜவில் இணைந்து காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கலாம்.

ஒரு வேளை அதுபோல் பாஜ ஒரு நிலை எடுத்து இருந்திருந்தால் நான்(ஹிமந்தா) மற்றும் சர்பானந்தா சோனவால்(முன்னாள் முதல்வர்) ஆகியோர் முதல்வராகி இருக்க முடியாது. அதே போல் மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங், அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு,கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோரும் வேறு கட்சிகளில் இருந்து பாஜவுக்கு வந்தவர்கள்தான். பாஜவில் பழைய உறுப்பினர்,புதிய உறுப்பினர் என்ற முறை கடைப்பிடிப்பிடிப்பது இல்லை. பாஜவில் பழசு, புதுசு மோதல் என்பது காங்கிரசின் சித்து விளையாட்டு’’ என்றார்.

The post பாஜவில் பழைய தலைவர்களுக்கு முக்கியத்துவம் இல்லையா?.. அசாம் முதல்வர் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Assam ,Chief Minister ,New Delhi ,Himanta Biswa Sharma ,BJP government ,
× RELATED முதலமைச்சர், அமைச்சர்கள் பற்றி அவதூறு:...