×

மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து 18 பேர் பலி

அய்ஸ்வால்: மிசோரத்தில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகினர். மிசோரத்தில் சாய்ராங் பகுதியில் ஆற்றின் குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் சுமார் 40 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினார்கள். தகவல் அறிந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

பிற்பகல் வரை 18 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது. 2 தூண்களுக்கு இடையே பிரமாண்ட கர்டர் பொருத்த முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் இரங்கல்
மிசோரம் விபத்து குறித்து பிரதமர் தனது டிவிட்டர் பதிவில்,‘‘மிசோரம் விபத்து குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்று தெரிவித்து இருந்தார்.

The post மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து 18 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Mizoram Aizawl ,Mizoram ,Sairang ,Dinakaran ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...