×

நிலவில் உள்ள மணலை போன்ற அனார்தசைட் எனப்படும் பாறை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது: சந்திராயன் 3 வெற்றிக்கு பின்னால் நாமக்கல்

நாமக்கல்: நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திராயன் 3 விக்ரம் லெண்டர் விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. வெகு நீண்ட தூர பயணத்திற்குப் பின் விண்கலம் இன்று பத்திரமாக நிலவில் கால் பதித்தது. இதன் மூலம் இந்தியா வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.இந்த வரலாற்றுச் சாதனையின் ஒரு புறம் நாமக்கல் மாவட்டமும் உள்ளது என்பது சந்தோஷமான விஷயம்.

நாமக்கல் மாவட்டத்தை அடுத்த பரமத்தி வேலூர் அருகே உள்ள குன்னமலை, சித்தம்பூண்டி கிராமப் பகுதிகளில் நிலவில் உள்ள மணலை போன்ற அனார்தசைட் எனப்படும் பாறை இங்கு அதிக அளவில் உள்ளது. சந்திராயன் திட்டம் தொடங்கும் முன்பே இங்கு இஸ்ரோ அதிகாரிகள் கற்களை துகள்கள் ஆக்கி ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இம்மண்ணை கொண்டு விண்கலத்தை திரை இறக்குவது போன்ற சோதனைகளை செய்து கண்டனர்.

தற்போது இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விக்ரம் லெண்டர் விண்கலம் விஞ்ஞானிகளின் முயற்சியால் பத்திரமாக தரைறங்கி உள்ளது. இந்த வெற்றியை குன்னமலை, சித்தம் பூண்டி மக்கள் பெருமையோடு கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

The post நிலவில் உள்ள மணலை போன்ற அனார்தசைட் எனப்படும் பாறை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது: சந்திராயன் 3 வெற்றிக்கு பின்னால் நாமக்கல் appeared first on Dinakaran.

Tags : Namakkal district ,Namakkal ,NAMACKAL ,ISRO ,Chandrayan 3 ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...