×

3ம் பாலினத்தவருக்கு தேர்தல் இடஒதுக்கீடு செய்ய ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: 3ம் பாலினத்தவருக்கு தேர்தல் இடஒதுக்கீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 3-ம் பாலினத்தோருக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

3ம் பாலினத்தவருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி ஊராட்சித் தலைவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கருத்து. சில பிரிவினரால் தவறாக நடத்தப்படும் 3ம் பாலினத்தோரை சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் இணைக்க வேண்டும். 3ம் பாலினத்தவருக்கு அரசு பல்வேறு சட்டங்களை வகுத்தும் அவை முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை.

கிராம விழாக்களிலும், கோவில் வழிபாட்டிலும் 3ம் பாலினத்தவர் பங்கேற்பதை உறுதி செய்யவேண்டும். 3ம் பாலினத்தோருக்கு எதிராக ஊராட்சித் தலைவர் தீர்மானம் நிறைவேற்றியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடலூர் அடுத்த நைனார்குப்பத்தில் 3ம் பாலினத்தவருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய ஊராட்சித் தலைவர் மோகன் தீர்மானம் நிறைவேற்றினார்.

The post 3ம் பாலினத்தவருக்கு தேர்தல் இடஒதுக்கீடு செய்ய ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Chennai High Court ,
× RELATED பெண் வழக்கறிஞர் மீது பதிவு...