×

சரித்திர சாதனை படைக்குமா சந்திரயான் – 3: இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்ப அமெரிக்காவின் நாசாவும், ஈசாவும் உதவி..!!

பெங்களூரு: இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்ப அமெரிக்காவின் நாசாவும் ஐரோப்பிய விண்வெளி முகமையும் உதவியுள்ளன. நிலவுக்கு சந்திரயான் -3 மேற்கொண்ட 3.84 லட்சம் கி.மீ. தூர பயணம் முழுவதும் நாசாவும் ஈ.எஸ்.ஏ.வும் உதவி செய்துள்ளன. நிலவை சுற்றி வரும் தாய்க்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்விலும் நாசா, ஈசாவின் உதவி முக்கியமானது. உலகின் பல இடங்களில் செயல்படும் அமெரிக்காவின் தரை கட்டுப்பாட்டு நிலையங்கள் சந்திரயான் 3-ஐ கண்காணிக்கின்றன.

அமெரிக்கா நிறுவியுள்ள பிரமாண்டமான ரேடியோ ஆண்டெனாக்கள் மூலமாக சந்திரயான்-3 பயணம் கண்காணிக்கப்படுகிறது. பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பிய விண்வெளி முகமையின் 15 மீ. விட்ட ஆண்டெனாவின் உதவியையும் இஸ்ரோ நாடியுள்ளது. இங்கிலாந்தின் கூன் கில்லியில் உள்ள 35 மீ. விட்ட ஆண்டெனா உதவியும் சந்திரயான் 3-ஐ கண்காணிக்க உதவியுள்ளது.

The post சரித்திர சாதனை படைக்குமா சந்திரயான் – 3: இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்ப அமெரிக்காவின் நாசாவும், ஈசாவும் உதவி..!! appeared first on Dinakaran.

Tags : US ,NASA ,ESA ,India ,Bengaluru ,European Space Agency ,America ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...