
புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் அங்கீகாரம் செய்யப்பட்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டார். இந்தாண்டு கடைசியில் 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரசாரங்களை மேற்கொள்ள ஏதுவாக சச்சின் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தின் நடந்த நிகழ்ச்சியில், சச்சின் டெண்டுல்கரை தேசிய அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டார். அந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், ‘கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் போது, எங்களது டிரஸ்ஸிங் ரூமில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு சாதிகள், வெவ்வேறு கலாசாரங்களை கொண்டவர்கள் ஆவர். ஆனால் அதுவே எங்களது பலமாக இருந்தது’ என்றார். இந்நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் அங்கீகாரம் appeared first on Dinakaran.