×

தாய்மாமன் மகளை திருமணம் முடிக்க முடியாத ஏக்கத்தில் வாலிபர் சாவு

திருவொற்றியூர்: தாய்மாமன் மகளை திருமணம் செய்துகொள்ள முடியாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். சென்னை திருவொற்றியூர் ராஜாஜி நகர், கக்கன் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வநாதன் (24). இவர் டிப்ளமோ படித்துவிட்டு எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்துவந்தார். இவர், தனது மாமன் மகளை காதலித்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக அவரையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டுள்ளார் ஆனால் வாலிபரின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்தநிலையில், அவசர, அவசரமாக வேறிடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.’’மாமன் மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன், வேறிடத்தில் பெண் பார்க்கவேண்டாம்’’ என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த செல்வநாதன், நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சாத்தங்காடு போலீசார் வந்து செல்வநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post தாய்மாமன் மகளை திருமணம் முடிக்க முடியாத ஏக்கத்தில் வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Thiruvotiyur Rajaji Nagar, Kakan, Chennai ,
× RELATED திருவொற்றியூர், மணலி பகுதிகளில்...