×

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவும் செய்தி தவறானது: ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா

அராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவும் செய்தி தவறானது எனவும் அவர் உயிருடன் இருக்கிறார் எனவும் ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதனிடையே அவர் உயிரிழந்ததாக கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக், வாசிம் ஜாபர் மற்றும் அஸ்வின் உள்ளிட்டோர் ஹீத் ஸ்ட்ரீக் குடும்பத்தினருக்கு ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹீத் ஸ்ட்ரீக் மரணம் அடையவில்லை என ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நான் அவரிடம் தான் கேட்டேன்அவர் உயிருடன் இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

49 வயதான ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட், 189 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார்.
கடந்த 2007ல் ஓய்வுபெற்ற அவர் ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றினார். அண்மைகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தென்ஆப்ரிககாவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று உயிர் இழந்தார். அவரின் மறைவுக்கு முன்னாள் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவும் செய்தி தவறானது: ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா appeared first on Dinakaran.

Tags : Heath Streak ,Henry Olanga ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...