×

ஜெயங்கொண்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கள ஆய்வு பணி

*அனைத்து துறைஅலுவலர்கள் பங்கேற்பு

ஜெயங்கொண்டம் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம் கடைவீதி, கிழக்கு தெரு, வடக்கு தெரு மற்றும் ஜுப்ளி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடை, பேன்சி ஸ்டோர் மற்றும் உணவகங்களில் அனைத்து துறை அலுவலர்களான குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள் ஜெயகாந்தி, தவச்செல்வன், காவல் துறை அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி, வட்டார மேற்பார்வையாளர்(பொ) கண்ணதாசன், ஆசிரியர் பயிற்றுநர்கள் குறிஞ்சி தேவி, ஐயப்பன், அந்தோணி சேவியர், சரவணன், மற்றும் சுகன்யா ஆகியோர்களும், சிறப்பாசிரியர்கள் பிரேம் குழந்தை, ரூபி மேரி ஹில்டா மேரி, லில்லி மேரி, ஸ்டெபி ஆகியோர் கொண்ட வட்டார குழுவினால் கள ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

இக்களாய்வில் 1 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை இடை நின்ற மாணவர்கள்,10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் உயர்வகுப்பில் சேராமல் இருக்கும் மாணவர்களையும் கண்டறிந்து தக்க அறிவுரை வழங்கி மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஜெயங்கொண்டம் 10ம் வகுப்பில் தோல்வியுற்ற மற்றும் இடைநின்ற மாணவர்கள் 5 பேரை கண்டறிந்து அவர்களின் பள்ளி வருகைக்கும், மேல்படிப்பிற்க்கும் உரிய முயற்சிகள் துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது. இக்கள ஆய்வு பணியினால் இதுவரை 209 மாணவர்களுக்கு, மேற்கொண்டு கல்வி பயில தக்க அறிவுரையும், ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.

The post ஜெயங்கொண்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கள ஆய்வு பணி appeared first on Dinakaran.

Tags : School Cella Children ,Jayangonda ,Jayangondam ,East street ,North street ,Ariyalur ,School cella ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் கல்வி இணைச் செயல்பாடு போட்டிகள்