×

சந்திரயான்-3 லேண்டரை நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை மாலை 5.44-க்கு தொடங்கும்: இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு: சந்திரயான்-3 லேண்டரை நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை மாலை 5.44-க்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தானியங்கி தரையிறங்கும் வரிசை அமைப்பு தொடங்க தயாராக இருப்பதாக இஸ்ரோ ட்விட்டரில் பதிவு செய்துள்ளது. தானியங்கி இறங்குமுறைப்படி லேண்டர் வாகனம் படிப்படியாக நிலவை நோக்கி இறங்கத் தொடங்கும். தானியங்கி இறங்கு இயக்கத்தை இயக்கியவுடன் லேண்டர் வாகனம் படிப்படியாக இறங்கத் தொடங்கும். நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ள உயரத்துக்கு லேண்டர் 5.44-க்கு வந்தடையும்.

குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன் தானியங்கி மூலம் நிலவில் தரையிறங்க இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டளை பிறப்பிப்பர். பெங்களூரு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டவுடன் படிப்படியாக லேண்டர் தரையிறங்கும். தானியங்கி முறையில் தரையிறங்க கட்டளை பிறப்பிக்கப்பட்ட பிறகு எந்த மாற்றமும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎல்எஸ் எனப்படும் தானியங்கி லேண்டரை தரையிறக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது. 8 நிலைகளில் லேண்டர் நிலவில் தரையிறங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. 5.44க்கு தரையிறங்கும் பணிகள் தொடங்கும் நிலையில் 6.04க்கு நிலவில் லேண்டர் தரையிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சந்திரயான் 3ன் லேண்டரின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

The post சந்திரயான்-3 லேண்டரை நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை மாலை 5.44-க்கு தொடங்கும்: இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Moon ,ISRO ,Bengaluru ,Dinakaran ,
× RELATED தனுசு